தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆண்டின் முதல் நாளை உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்

மும்பை: 2019-2020 நிதியாண்டின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

சென்செக்ஸ் 198.96 புள்ளிகள் உயர்வு

By

Published : Apr 1, 2019, 7:12 PM IST

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 198.96 புள்ளிகள், அதாவது 0.51 விழுக்காடு உயர்வடைந்து 38,871.87 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. முன்னதாக, சென்செக்ஸ் ஒரே நாளில் 400 புள்ளிகள் உயர்ந்து 39,115.57 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின் அதிலிருந்து சரிவடைந்து 38,871.87 புள்ளிகளில் நிறைவு செய்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, 31.70 புள்ளிகள் (0.27 சதவிகிதம்) உயர்ந்து 11,655.60 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டியும் வர்த்தக நேரத்தில், 11,700 புள்ளிகள் தொட்டு மீண்டும் சரிவடைந்தது.

டாடா மோட்டர்ஸ், வேதாந்தா, பாரதி ஏர்டெல், மாருதி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டாடா ஸ்டீல்ஸ், எஸ் அண்ட் டி ஆகிய நிறுவன பங்குகள் 7.37 விழுக்காடுவரை உயர்வு கண்டன.

இன்டஸ்இன்ட் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஃஎப்சி, ஓஎன்ஜிசி ஆகிய பங்குகள் சரிவை சந்தித்தன.

உலோக, தொழில்நுட்பத்துறை, எரிசக்தித்துறை, தொலைத்தொடர்புத்துறை, ஆட்டோமொபைல் துறை ஆகிய பங்குகள் உயர்வையும், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வு பொருட்களின் பங்குகள் சரிவையும் சந்தித்தன.

அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் போரில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையும், மார்ச் மாத சீனா உற்பத்தி விரிவடைந்துள்ள தகவலும் ஆசிய சந்தைகளில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்துள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details