மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஜன. 05) 260.98 (0.54 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 48,486.24 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 66.60 (0.47 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,199.50 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக, ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 6 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்., ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை ஓ.என்.ஜி.சி., பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இந்தியாவில் கோவிட்-19 தொடர்ந்து குறைந்துவருவதாலும் தடுப்பூசிகளுக்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாலும் வர்த்தகர்களிடையே நம்பிக்கை அதிகரித்து சந்தை உயர்வைக் கண்டன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நாட்டின் எரிவாயு தேவையை நிறைவேற்ற பன்முகத் திட்டங்கள்: பிரதமர் மோடி