தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: சரிவுடன் நிறைவடைந்த இந்திய சந்தைகள்

தொடர்ந்து உச்சம் கண்டுவந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று மெல்லிய சரிவைக் கண்டன.

இந்திய பங்குச்சந்தைகள்
Share Market

By

Published : Feb 16, 2021, 4:41 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (பிப். 16) சுமார் 49.96 புள்ளிகள் (0.10 விழுக்காடு) சரிந்து 52,104.17 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 1.25 புள்ளிகள் சரிந்து 15,313.45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக, பவர்கிரிட் நிறுவனத்தின் பங்குகள் 6 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., கோடாக் வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே இந்தியா, இன்போஸிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.

இதையும் படிங்க:தர்காவிற்கு காவிப் போர்வை அளித்த மோடி

ABOUT THE AUTHOR

...view details