மும்பை: கடன் வட்டியில் மாற்றங்கள் எதுவுமில்லை என்ற ரிசர்வ் வங்கியின் முடிவால், இன்றைய வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தை புதிய உயர்வைக் கண்டது.
ரிசர்வ் வங்கி கொள்கை எதிரொலி - பச்சை வண்ணத்தில் மிளிர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி! - vanigam news in tamil
இன்றைய இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,000ஐ கடந்து வர்த்தகமானது. வர்த்தக நாள் முடிவில் 117 புள்ளிகள் உயர்வுடன் 50,731ஆக நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51,000ஐ கடந்து வர்த்தகமானது. வர்த்தக நாள் முடிவில் 117 புள்ளிகள் உயர்வுடன் 50,731ஆக நிறைவடைந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 28.60 புள்ளிகள் உயர்வுடன் 14,924ஆக வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
இன்றைய வர்த்தகத்தில், எஸ்பிஐ வங்கி, டாடா ஸ்டீல், கோத்ரேஜ் புராபர்டீஸ், டிவிஸ் லேப்ஸ், கோடக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன. அதேவேளையில் இண்டிகோ பெய்ண்ட்ஸ், எம்கே குளோபல், இண்டோ கவுண்ட், காஸ்மோ ஃபிலிம்ஸ், ஆர்வி என்கான் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.