தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரடியின் ஆட்டம் காளையிடம் செல்லாது.. பிஎஸ்இ 600 புள்ளிகள் உயர்வு! - இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம்

இந்திய பங்குச் சந்தைகள் தொடக்கத்தில் வீழ்ச்சியை கண்டாலும் நிறைவில் எழுச்சியை கண்டன. மும்பை பங்குச் சந்தையை (பிஎஸ்இ) பொருத்தமட்டில் 696.81 (1.22%) புள்ளிகள் அதிகரித்தும், தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிப்ஃடி 197.90 (1.16%) அதிகரித்தும் வர்த்தகமாகின.

Sensex
Sensex

By

Published : Mar 22, 2022, 6:45 PM IST

மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தின்போது இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வணிகம் ஆகின. தொடக்கத்தில் பி.எஸ்.இ., 200 புள்ளிகள் வரை சரிவை கண்டது.

இந்த நிலையில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகம் ஆனது. இதையடுத்து பங்கு வர்த்தகத்தின் நிறைவில், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) 696.81 (1.22%) புள்ளிகள் உயர்ந்து 57,989.30 என வர்த்தகம் ஆனது.

தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் நிப்ஃடி 197.90 (1.16%) உயர்ந்து 17,315.50 என வர்த்தகம் ஆனது. தேசிய பங்குச் சந்தையை பொருத்தமட்டில் டெக்எம் (TECHM), பிபிசிஎல் (BPCL), டாடா மோட்டார்ஸ் (TATAMOTORS), ரிலையன்ஸ் (RELIANCE) மற்றும் பஜாஜ்பின்சர்வ் ( BAJAJFINSV) உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகள் ஏற்றத்திலும், இந்துஸ்தான் யூனிலிவர் (HINDUNILVR), நெக்ஸ்லே இந்தியா (NESTLEIND), பிரிட்டானியா (BRITANNIA), சிப்லா (CIPLA) உள்ளிட்ட நிறுவன பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகம் ஆகின.

மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 58.40 (+3.95%) வரை உயர்ந்து காணப்பட்டன. இந்த நிறுவன பங்குகளின் விலை 1,538.20 ஆக உள்ளது. அதிகபட்சமாக இழப்பை சந்தித்ததில் ஹெச்யூஎல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவன பங்குகள் 57.50 வரை சரிந்து ரூ.1,993.50 என வர்த்தகம் ஆனது.

ரஷிய-உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தைகள் அழுத்தமாக காணப்படுகின்றன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை தவிர்க்கின்றனர். மேலும் முந்தைய முதலீடுகளையும் விற்பனை செய்யும் நிலையும் உள்ளது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாள் வர்த்தகமான திங்கள்கிழமை (மார்ச் 21) மட்டும் ரூ.2,962.12 பங்குகள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதலீட்டாளர்களின் கனவை கலைத்த கரடி..!

ABOUT THE AUTHOR

...view details