தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: தொடர்ந்து டாப் கியரில் உயரும் இந்திய பங்குச்சந்தைகள் - மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்

2021ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இந்திய பங்குச்சந்தைகள் சிறப்பான உயர்வைக் கண்டுவருகின்றன.

இந்திய சந்தைகள்
இந்திய சந்தைகள்

By

Published : Jan 12, 2021, 4:33 PM IST

இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (ஜன. 12) சிறப்பான உயர்வைக் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று முதன்முறையாக 49 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிய நிலையில் இன்று சென்செக்ஸ் 247.79 (0.5 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 49,517.11 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 78.70 (0.54 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 14,563.45 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் 4 விழுக்காடு உயர்வு கண்டது. அதற்கு அடுத்தபடியாக பாரதி ஏர்டெல், ரிலையனஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.

அதேவேளை ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டைட்டான், கோடாக் வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி வரும் 16ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அது வர்த்தகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்து சந்தை உயர்வைக் கண்டன என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை இனி நீட்டிக்க முடியாது-மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details