மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்கிழமை (ஜன.5) தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. உலகளாவிய பங்குகளில் ஏற்பட்ட பலவீனமான போக்குக்கு மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இழப்புகளை கண்டன.
மும்பை பங்குச் சந்தையை (பிஎஸ்இ) பொருத்தமட்டில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் குறியீட்டெண் 112.74 புள்ளிகள் (0.23 சதவீதம்) குறைந்து 48,064.06 ஆகவும், தேசிய பங்கு சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 38.25 புள்ளிகள் (0.27 சதவீதம்) சரிந்து 14,094.65 ஆகவும் வர்த்தகமானது.
அதிகப்படியாக ஓ.என்.ஜி.சி நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தது. அதேபோல் எம் அண்ட் எம், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தொடர்ந்து சரிவில் வர்த்தகமாகின்றன.