பட்ஜெட் எதிரொலி: 50,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ் - sensex scaled new high
09:47 February 02
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 50 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமானது. நேற்று மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகத்தைத் தொடங்கிய சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 14 ஆயிரத்து 700 புள்ளிகளில் வர்த்தகமானது. நிதிநிலை அறிக்கையில் தொழில் துறையை ஊக்குவிக்கும்விதமாக அறிவிப்புகள் வெளியானதால் இந்த உயர்வைச் சந்தித்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை கணிசமான உயர்வைக் கண்டு உச்சத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.