மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (ஜன.12) சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் கண்டது. இன்றைய வர்த்தகநாள் முடிவில் சென்செக்ஸ் 533.15 புள்ளிகள் (0.88 விழுக்காடு) உயர்ந்து 61,150 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 156.60 (0.87 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 18,212.35 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
இன்றைய வர்த்தக நாளில் மின்சக்தி, ஆட்டோமொபைல், எண்ணெய், வாயு எரிசக்தி உள்ளி துறைகள் சிறப்பான உயர்வை கண்டன.