தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை! - பட்ஜெட்

மும்பை: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் தொடர் சரிவைச் சந்தித்துவரும் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று 300 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது.

BSE

By

Published : Jul 22, 2019, 10:47 AM IST

2019-20ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப்பின் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. பெரு நிறுவனங்களுக்கான 25 விழுக்காடு வரி போன்ற அறிவிப்புகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடனே தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 32 புள்ளிகளாக உள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 318 புள்ளிகளாக உள்ளது.

சரிவுடன் தொடங்கிய சந்தை

நிதிநிலை அறிக்கைக்கு முன் சுமார் 40 ஆயிரம் புள்ளிகளை நெருங்கிய பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி காரணமாக சுமார் இரண்டாயிரம் புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details