தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பத்து வாரங்களில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு! - இந்திய ரூபாயின் மதிப்பு

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த பத்து வாரங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சரிந்துள்ளது.

பத்து வாரத்தில் இல்லாத அளவு சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!
பத்து வாரத்தில் இல்லாத அளவு சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!

By

Published : Nov 4, 2020, 10:59 PM IST

Updated : Nov 4, 2020, 11:10 PM IST

இன்றைய வர்த்த்க நாளில் இண்டர்பேங்க் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.74 ரூபாய்க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. பின்னர் அதிகபட்சமாக 74.57 ரூபாயாகவும், 74.90 ரூபாயாகவும் குறைந்தது. இறுதியாக 74.76 ரூபாயில் முடிவடைந்தது. இதன் மூலம் அமெரிக்க டாலருக்கு எதிராக கடந்த பத்து வாரங்களில் இல்லாத அளவு இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா வரை சரிவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று இதேபோன்ற சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், சென்செக்ஸ் 355 புள்ளிகள் அதிகரித்து 40 ஆயிரத்து 616 புள்ளிகளாக முடிவு பெற்றது. தேசியப் பங்கு சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 95 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 908 புள்ளிகளாக முடிவடைந்தது.

அதேபோன்று, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 0.38 விழுக்காடு அதிகரித்து 39.86 டாலர்களாக வர்த்தகமானது.

இதையும் படிங்க...ஊதிய உயர்வு அளிக்க உள்ள 87% இந்திய நிறுவனங்கள்: கணக்கெடுப்பில் தகவல்

Last Updated : Nov 4, 2020, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details