தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு! - ரூபாய் மதிப்பு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.

Rupee
Rupee

By

Published : Apr 16, 2020, 2:35 PM IST

Updated : Apr 16, 2020, 2:56 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் உலகெங்கும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக, இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறை முற்றாக முடங்கியுள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது.

இந்நிலையில், இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 0.36 பைசா சரிவை சந்தித்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 76.72 ரூபாய் என வர்த்தகமாகிவருகிறது.

கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச பொருளாதாரமும் மோசமாகியுள்ளது. சர்வதேச பொருளாதாரம் இந்தாண்டு மூன்று விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கவலை தெரிவித்துள்ளார்.

மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய உள்நாட்டு உற்பத்தி 2020-21ஆம் நிதியாண்டில் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க: நிலைதடுமாறும் உலக வர்த்தகம்: ரூ.50 ஆயிரத்தை தொடும் தங்கம்?

Last Updated : Apr 16, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details