நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்ந்துவருகிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் சமீப காலங்களாக வர்த்தகத்தில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன.
ரூ.13 ஆயிரம் கோடி லாபத்தை அள்ளிய ரிலையன்ஸ்! - ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு உயர்வு
டெல்லி: ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததை விட 13 ஆயிரத்து 248 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் காலாண்டில் எதிர்பார்த்ததை விட 13 ஆயிரத்து 248 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 10 ஆயிரத்து 141 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபமாக கிடைத்திருந்தது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கால் பல நிறுவனங்கள் பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்திற்குப் பின் 130 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.