தமிழ்நாடு

tamil nadu

வைப்புத்தொகை வரியை 0.25 விழுக்காடாக தனியார் வங்கிகள் குறைப்பு!

By

Published : Jun 18, 2019, 12:36 PM IST

டெல்லி: ரிசர்வ் வங்கி அறிவித்ததை தொடர்ந்து பெரும் தனியார் வங்கிகள் வைப்புதொகையின் மேல் உள்ள வரியை 0.25 விழுக்காடாக குறைத்துள்ளது.

ICICI

ஜூன் மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வைப்புத்தொகையின் மேல் உள்ள வரியை குறைத்தது. இதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகள் பணப்புழக்க விதிகளைத் தளர்த்தி வைப்புத் தொகையின் மேல் உள்ள வரியை குறைத்துள்ளன.

ஐசிஐசிஐ வங்கி வைப்புத் தொகையின் மேல் உள்ள வரியை 0.10-0.25 விழுக்காடாகவும், ஆக்சிஸ் வங்கி 0.15 விழுக்காடாகவும் குறைத்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் வரிக் குறைப்பு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எச்.டி.எப்.சி வங்கியும் வைப்புத் தொகையின் மேல் உள்ள வரியை குறைப்பதா, இல்லையா என பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details