கரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பலரும் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் 10 நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன.
அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் இடைக்கால முடிவுகளில் தடுப்புமருந்து 95 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஃபைஸர் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தது. ஒருகட்டத்தில் நான்கு விழுக்காடு வரை ஏற்றம்கண்டு 5,250 ரூபாய்க்கு வர்த்தகமானது.