கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில்களும் முடங்கிப்போயுள்ளன. தொழில் துறை முற்றிலும் முடங்கியிருப்பதால், உலகிலுள்ள முன்னணி பங்குச்சந்தைகள் அனைத்தும் கடந்த சில வாரங்களாகவே சரிவைச் சந்தித்துவந்தன. இதற்கு இந்தியப் பங்குச்சந்தையும் விதிவிலக்கல்ல.
ஏற்றத்தில் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை! - நிஃப்டி
மும்பை: இந்தியப் பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே ஏற்றம் கண்டுவருகிறது.
Sensex
இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியது முதல் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தைச் சந்தித்துவருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 875 புள்ளிகள் அதிகரித்து 31,478 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் அதிகரித்து 8,227 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
Last Updated : Apr 17, 2020, 12:33 PM IST