மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததைவிட 467 புள்ளிகள் அதிகமாகத் தனது வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 87.7 புள்ளிகள் உயர்ந்து 31,653 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
அதேபோல தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.6 புள்ளிகள் உயர்ந்து 9,299 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
அதிகபட்சமாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்குகள் நான்கு விழுக்காடும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மூன்று விழுக்காடு உயர்ந்துள்ளன. அதேபோல கோடாக் வங்கி, டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல். டெக்., டி.சி.எஸ். ஆகியவற்றின் பங்குகளும் ஏற்றத்தில் தொடங்கின.