தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சேவையை மீண்டும் தொடங்கிய ஓலா! - சேவையை மீண்டும் தொடங்கிய ஓலா

டெல்லி: ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஓலா வாடகை வண்டி சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இனி ஓலாவை பயன்படுத்தி விமான நிலையங்களுக்கு செல்லலாம் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

Ola resumes airport operations
Ola resumes airport operations

By

Published : May 27, 2020, 1:55 AM IST

கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. மேலும் முற்றிலுமாக வாகன சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டதால் ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்கள் இயங்காததால் விமான நிலையம் செல்வோர் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

இதனை கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஓலா வாடகை கார் நிறுவனம் அதன் சேவையை தொடங்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் இது வரை மருத்துவமனைக்கு மட்டுமே சேவையை வழங்கிவந்த ஓலா, இனி விமானநிலையங்களுக்கும் அதன் சேவையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 22 இடங்களில் சேவையை தொடங்கியுள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.

ஊரடங்கால் தொழிலில் கடந்த இரண்டு மாதங்களில் 95 விழுக்காடு சரிவு ஏற்பட்டது என்றும் அதனால் ஆயிரத்து 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக ஓலா நிறுவனம் அறிவித்தது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details