நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து, 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டள்ளது.
கடந்த வாரங்களில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்த முட்டை விலை, 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களில், சிவராத்திரி பண்டிகையையொட்டி முட்டை நுகர்வு குறைந்து, முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டன.