தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடஇந்தியாவில் வாழும் மக்கள் புதிய நிதியாண்டை தொடங்கினார்கள். இதேநாளில் சிறப்பு வர்த்தக நேரமான முகூர்த்த வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஒரு மணி நேரம் நடக்கும் இந்த சிறப்பு வர்த்தக நேரத்தில் பங்குகள் உடனடியாக விற்று தீர்ந்துவிடும்.
வழக்கம்போல் இன்று நடைபெற்ற முகூர்த்த வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், வங்கி போன்ற துறைகளின் பங்குகள் சரசரவென விற்று தீர்ந்தது. இந்திய தேசிய பங்குச்சந்தை 55 புள்ளிகள் உயர்ந்து 11,639 புள்ளிகளில் நிறைவடைந்தது. மும்பை பங்கு சந்தை 223 புள்ளிகள் உயர்ந்து 39,058 புள்ளிகளில் நிறைவடைந்தது.