நாட்டில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை இல்லாததால் இந்தியாவின் மிகப்பெரிய கார்கள் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தொடர்ந்து 8ஆவது மாதமாக அதன் உற்பத்தியைக் குறைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் மொத்த வாகன உற்பத்தியின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 50ஆயிரத்து 497 (1,50,497 ) ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 19ஆயிரத்து 337 (1,19,337) ஆக குறைந்துள்ளது.
பயணிகள் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 318 (148,318) ஆக இருந்து, தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 383 (117,383) குறைந்துள்ளது. அதேபோன்று வேன் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை 2018 அக்டோபரில் 13ஆயிரத்து 817 (13,817) ஆக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபரில் அது, 7ஆயிரத்து 661 (7,661) ஆக குறைந்துள்ளது.
ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஓல்டு வேகன்ஆர் போன்ற சிறிய வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை, கடந்த ஆண்டு 34 ஆயிரத்து 295 ஆக (34,295) இருந்த நிலையில் தற்போது 20 ஆயிரத்து 985 (20,985) ஆக குறைந்துள்ளது.