கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்துவந்த நிலையில், இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது.
அதன்படி, சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. மேலும் தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 123.82 புள்ளிகள் உயர்ந்து 26797.85 எனவும், நிஃப்டி 46.55 புள்ளிகள் உயர்ந்து 7847.60 எனவும் வர்த்தகமாகிவருகிறது.
அதிக பங்குதாரர்களைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடும் சரிவுக்குப் பிறகு 10 சதவிகிதம்வரை இன்று உயர்ந்துள்ளது. மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ் போன்ற முக்கிய நிறுவனப் பங்குகள் அனைத்தும் உயர்ந்துள்ளதால், பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் உகாதி பண்டிகையை முன்னிட்டு, அந்நியச் செலாவணி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:21 நாட்கள் விற்பனையை நிறுத்தி வைத்த பிளிப்கார்ட்!