இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே, மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நாள் இறுதியில் 519.11 புள்ளிகள் (1.49 விழுக்காடு) அதிகரித்து 35,430.43 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159.80 புள்ளிகள் (1.55 விழுக்காடு) அதிகரித்து 10,347.95 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் பைனான்ஸ், எல்&எல் நிறுவனம், இண்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.எல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. மறுபுறம் ரிலையன்ஸ், பாரத் ஏர்டெல், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்திய ரூபாய் மதிப்பு: