மும்பை: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும தலைமையகம், தெற்கு மும்பையில் உள்ள இரு அலுவலகங்கள் என 2,892 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது நிறுவனங்கள் தரப்பில் பெரும் நிகழ்வாக பார்க்கப்பட்டது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
டாக்டர் ரெட்டீஸ் லேப், சன் ஃபார்மா, விப்ரோ, மாருதி சுசுகி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. பிபிசிஎல், இண்டஸ்இந்த் வங்கி, இந்தியன் ஆயில், எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற உத்தரவு ஜூன் 1, 2021 வரை நீட்டிப்பு!
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.06 புள்ளிகள் குறைந்து 37,736.07 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 100.70 புள்ளிகள் குறைந்து 11,102.15 புள்ளிகளில் நிறைவுற்றது.
ஏர் இந்தியா நிர்ணயித்த கட்டணமே இறுதியானது - விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
ரூபாய்
நேற்று ரூ.74.81 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மூன்று காசுகள் குறைந்து ரூ.74.84 காசுகளாக இருந்தது.
ஜூலை 30 பங்குச் சந்தை நிலவரம் பொருள் (கமாடிட்டி) வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 67 புள்ளிகள் குறைந்து 3025 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 87 புள்ளிகள் குறைந்து 53,100 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 2,590 புள்ளிகள் உயர்ந்து 62,764 ரூபாயாக உள்ளது.