இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 350 புள்ளிகள் குறைந்து, இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. இன்று நாள் முழுவதும் சரிவிலேயே பங்குச்சந்தை வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 667.29 புள்ளிகள் (1.77 விழுக்காடு) சரிந்து 36,939.60 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.85 புள்ளிகள் (1.64 விழுக்காடு) குறைந்து 10,891.60 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக யுபிஎல் நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் சரிவடைந்தது. அதேபோல இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைப், கோட்டக் வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மறுபுறம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6 விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. டைட்டான், டாடா ஸ்டீல், BPCL உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்தன.
சர்வதேச பங்குச்சந்தை