மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப்.16) வர்த்தகமானதைவிட சுமார் 99 புள்ளிகள் சரிந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப்.16) நாள் முழுவதும் சரிவிலேயே வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் (0.82 விழுக்காடு) சரிந்து 38,979.85 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88.45 புள்ளிகள் (0.72 விழுக்காடு) சரிந்து 11,516.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காடு வரை குறைந்தது. அதேபோல பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், எல்&டி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
அதேபோல் ஹெச்.சி.எல். டெக், இன்போசிஸ், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.