இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 110.02 புள்ளிகள் (1.15 விழுக்காடு) உயர்ந்து 44,655.44 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.10 புள்ளிகள் (1.08 விழுக்காடு) சரிந்து 13,109.05 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக கெயில் நிறுவனத்தின் பங்குகள் 8.09 விழுக்காடு உயர்ந்தது. அத்துடன், சன் பார்மா, டெக் மஹிந்திரா, யு.பி.எல். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
அதேவேளை நெஸ்லே இந்தியா, கோடக் வங்கி, டைட்டான், பஜாஜ் பைனானஸ், எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.