மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று (ஆகஸ்ட் 6) செய்தியாளர்களைச் சந்தித்து வங்கிகளின் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 4 விழுக்காடாகவே தொடரும் என்று அறிவித்தார். மேலும், தங்க நகைக்கடன் 90 விழுக்காடு வரை பெறலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கெய்ல், யூபிஎல் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 90% வரை நகைக்கடன்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 362.12 புள்ளிகள் உயர்ந்து 38,025.45 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 98.50 புள்ளிகள் உயர்ந்து 11,200.15 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
நேற்று ரூ.74.95 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.74.92 காசுகளாக இருந்தது.
ஆகஸ்ட் 6 பங்கு சந்தை நிலவரம் பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 11 புள்ளிகளை உயர்ந்து 3172 ரூபாயாக வர்த்தகமானது
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 706 புள்ளிகள் உயர்ந்து 55,804 ரூபாயாக வர்த்தகமானது
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 3755 புள்ளிகள் உயர்ந்து 75,648 ரூபாயாக வர்த்தகமானது