தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்வு; வாழ்நாள் உயர்வைச் சந்தித்த ரிலையன்ஸ் - பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் உயர்ந்து 38,140.47 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

july 23 Market Roundup
july 23 Market Roundup

By

Published : Jul 23, 2020, 7:29 PM IST

மும்பை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருதல், பெங்களூரு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதலீடுகள் கொஞ்சம் சாதகமான சூழலை உருவாக்கியது. இதன் எதிரொலியாக ரிலையன்ஸ் நிறுவன பங்கு தனது வாழ்நாள் உயர்வைத் தொட்டு இன்று (ஜூலை23) வர்த்தகமானது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

ஈச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ரிலையன்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஆக்ஸிஸ் வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின. கடந்த சில நாள்களாக விலை அதிகரித்த ரிலையன்ஸ்கூட நேற்று விலை சரிந்து வர்த்தகமானது.

வால்மார்ட் இந்தியா ஃபிளிப்கார்ட் வசம்: ஜியோ மார்ட்டுடன் போட்டி போட திட்டம்!

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 268.95 புள்ளிகள் அதிகரித்து 38,140.47 புள்ளிகளில் வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 82.85 புள்ளிகள் உயர்வைக் கண்டு 11,215.45 புள்ளிகளில் நிறைவுற்றது.

ஆசஸ் ROG-3: இது விளையாட்டுப் பிரியர்களுக்கான ஸ்மார்ட்போன்!

ரூபாயின் மதிப்பு

நேற்று ரூ.74.77 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா உயர்ந்து ரூ.74.76 காசுகளாக இருந்தது.

ஜூலை 23 பங்குச் சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை

பொருள் (கமாடிட்டி) வணிகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 9 புள்ளிகளை இழந்து 3126 ரூபாயாக வர்த்தகமானது.

ABOUT THE AUTHOR

...view details