மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (செப். 15) வர்த்தகமானதைவிட சுமார் 65 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று (செப். 16) நாள் முழுவதும் ஏற்றத்திலேயே இந்திய பங்குச்சந்தை வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 258.50 புள்ளிகள் (0.66 விழுக்காடு) உயர்ந்து 39,302.85 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.75 புள்ளிகள் (0.72 விழுக்காடு) அதிகரித்து 11,604.55 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை உயர்ந்தது. அதேபோல பஜாஜ் ஆட்டோ, சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இன்போசிஸ், எல் & டி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம் இன்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
நேற்று (செப் 15) வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,170 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.