தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர் உயர்வில் இந்தியப் பங்குச்சந்தைகள்; உச்சம் தொட்ட சென்செக்ஸ்! - இந்தியப் பங்குச்சந்தைகள் நிலவரம்

தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்வு கண்ட இந்தியப் பங்குச்சந்தைகள், இன்று (டிசம்பர் 17) புதிய உச்சத்தை தொட்டன.

Market Roundup
Market Roundup

By

Published : Dec 17, 2020, 8:55 PM IST

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று சுமார் 223.88 புள்ளிகள் உயர்ந்து 46,992.57 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 58 புள்ளிகள் உயர்ந்து 13,740.70 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

ஏற்றம்-இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக டிவிஸ் லெப் நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் பைனான்ஸ், இண்டஸ்இன்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, மாருதி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

தொடர் உயர்வில் இந்தியப் பங்குச்சந்தைகள்

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 70 ரூபாய் உயர்ந்து 46,950 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1,400 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 67,000 ரூபாய்க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:மாருதி, ஃபோர்டை தொடர்ந்து விலை உயர்வை அறிவித்த மஹிந்திரா

ABOUT THE AUTHOR

...view details