தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை: இந்திய பங்குச்சந்தை இன்று தனது வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்துள்ளது.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை
ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை

By

Published : Jul 28, 2020, 7:09 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 226 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே இந்திய பங்குச்சந்தை பயணித்தது.

இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 558.22 புள்ளிகள் (1.47 விழுக்காடு) உயர்ந்து 38,492.95 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168.75 புள்ளிகள் (1.52 விழுக்காடு) உயர்ந்து 11,300.55 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ், கோடாக் மஹிந்திரா வங்கி, எம் & எம், மாருதி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை

சர்வதேச பங்குச்சந்தை

அமெரிக்க பங்குச்சந்தையைப் போலவே ஆசிய பங்குச்சந்தையும் ஏற்றம் கண்டே வர்த்தமாகின

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 0.7 விழுக்காடு குறைந்து, பேரல் ஒன்று 43.87 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் தற்போது 74.84 ரூபாயாக இருக்கிறது.

இதையும் படிங்க: கரோனா எதிரொலி: 350 பேரை வேலையைவிட்டு தூக்கிய ஸ்விகி

ABOUT THE AUTHOR

...view details