தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உயர்வைக் கண்ட இந்திய பங்குச் சந்தை!

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 162.94 புள்ளிகள் உயர்ந்து 40,707.31 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

Market Roundup
Market Roundup

By

Published : Oct 21, 2020, 6:13 PM IST

மும்பை: முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையால் பங்குச் சந்தை இன்று நல்ல ஏற்றத்தைப் பெற்றது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

பவர் கிரிட் கார்ப், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ, கெயில் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. பிரிட்டானியா, டி.சி.எஸ்., எஸ்பிஐ ஆயுள் காப்பீடு, ஹீரோ மோட்டோகார்ப், எச்.டி.எஃப்.சி லைஃப் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 162.94 புள்ளிகள் உயர்ந்து 40,707.31 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 40.85 புள்ளிகள் உயர்ந்து 11,937.65 புள்ளிகளில் நிறைவுற்றது.
    பங்குச்சந்தை நிலவரம்

ரூபாய்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்வுடன் ரூ.73.58 ஆக இருந்தது.

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 21 புள்ளிகள் சரிந்து 3,891 ரூபாயாக இருந்தது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 262 புள்ளிகள் உயர்ந்து 51,172 ரூபாயாக இருந்தது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 345 புள்ளிகள் உயர்ந்து 63,469 ரூபாயாக இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details