தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: மீண்டும் உயர்வின் பாதையில் இந்திய சந்தைகள் - பெட்ரோல், டீசல் விலை

இந்த வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன.

இந்திய சந்தைகள்
இந்திய சந்தைகள்

By

Published : Oct 16, 2020, 5:35 PM IST

வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 254.57 புள்ளிகள் (0.64 விழுக்காடு) உயர்ந்து 39,982.98 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.10 புள்ளிகள் (0.70 விழுக்காடு) உயர்ந்து 11,762.45 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் 6.69 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல், பி.பி.சி.எல், ஹின்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை யு.பி.எல்., எச்.சி.எல்., ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48,530-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.61,600-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:செப்டம்பரில் பயணிகள் வாகன விற்பனை 26% உயர்வு

ABOUT THE AUTHOR

...view details