இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 629.12 புள்ளிகள் உயர்ந்து 38,697.05 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169.40 புள்ளிகள் உயர்ந்து 11,416.95 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக இன்டஸ் இன்ட் வங்கிப் பங்குகள் சுமார் 12.44 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
அதேவேளை, டாக்டர் ரெட்டி, ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., என்.டி.பி.சி., டைட்டான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.