சர்வதே பங்குச் சந்தை எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 193 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது.
இன்று நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்றத்திலேயே வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 498.65 புள்ளிகள் (1.43 விழுக்காடு) அதிகரித்து 35,414.45 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127.95 புள்ளிகள் (1.24 விழுக்காடு) அதிகரித்து 10,430.05 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் ஆறு விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதேபோல் பஜாஜ், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனானஸ், ஐ.டி.சி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்தன.
மறுபுறம், என்டிபிசி, நெஸ்லே இந்தியா, எல் & டி, எம் & எம் மற்றும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச் சந்தை