வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 449 புள்ளிகள் (1.12 விழுக்காடு) உயர்ந்து 40,431.60 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 110.60 புள்ளிகள் (0.94 விழுக்காடு) உயர்ந்து 11,873.05 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 5.11 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக நெஸ்லே இந்தியா, கெயில், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை ஹீரோ மோட்டார்ஸ், சிப்லா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.