தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: தொடர் உயர்வை கண்டுவரும் இந்தியப் பங்குச் சந்தைகள் - சந்தை நிலவரம்

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர் ஏற்றத்தைச் சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வைச் சந்தித்துள்ளது.

Market Roundup
Market Roundup

By

Published : Oct 7, 2020, 6:05 PM IST

வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 304.38 புள்ளிகள் (0.77 விழுக்காடு) உயர்ந்து 39,878.95 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.45 புள்ளிகள் (0.66 விழுக்காடு) உயர்ந்து 11,738.85 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன. இதையடுத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியப் பங்குச் சந்தை உயர்வைச் சந்தித்துவருகிறது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக டைட்டான் நிறுவனத்தின் பங்குகள் 4.50 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார், மாருதி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன. அதேவேளை பாஜாஜ் பைனான்ஸ், பிபிசிஎல், ஹின்டால்கோ, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன.

தொடர் உயர்வில் இந்தியச் சந்தைகள்

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48,050-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.60,200-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.21க்கும், டீசல் ரூ.76.01க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:ஸ்டேட் வங்கி தலைவராக தினேஷ் குமார் காரா நியமனம்

ABOUT THE AUTHOR

...view details