தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பெரும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை! - நிஃப்டி

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்து 40145.50 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

Market Roundup
Market Roundup

By

Published : Oct 26, 2020, 9:12 PM IST

மும்பை: முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையால் இழந்த பங்குச் சந்தை இன்று பெரும் சரிவைக் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்

எச்.டி.எஃப்.சி லைஃப், நெஸ்லே, கோட்டக் மஹிந்திரா, பி.என்.பி, இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. கோ-ஃபோர்ஜி., ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ, ஜிண்டால் ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தக நாள் முடிவில்,

  • மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 540 புள்ளிகள் குறைந்து 40145.50 புள்ளிகளில் வர்த்தகமானது.
  • தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 162.60 புள்ளிகள் குறைந்து 11767.80 புள்ளிகளில் நிறைவுற்றது.
    பங்குச் சந்தை நிலவரம்

ரூபாய்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் மதிப்பிழந்து ரூ.73.85 ஆக இருந்தது.

பொருள் வணிகச் சந்தை

  • கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 94 புள்ளிகள் சரிந்து 2,845 ரூபாயாக இருந்தது.
  • தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 111 புள்ளிகள் உயர்ந்து 50,950 ரூபாயாக இருந்தது.
  • வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 451 புள்ளிகள் உயர்ந்து 61,998 ரூபாயாக இருந்தது.

ABOUT THE AUTHOR

...view details