தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கடும் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் - இந்திய பங்குச் சந்தைகள்

சர்வதேச சந்தைகளின் தாக்கம் காரணமாக இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி சரிவைச் சந்தித்தன.

இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள்

By

Published : Sep 21, 2020, 8:23 PM IST

வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 811.68 புள்ளிகள் (2.09 விழுக்காடு) சரிந்து 38,034.14 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 254.40 புள்ளிகள் (2.21 விழுக்காடு) சரிந்து 11,250.55 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.78 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், கோடாக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

இந்திய பங்குச் சந்தைகள் சரிவு

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.49,340-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.67,000க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.41க்கும், டீசல் ரூ.76.94க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்? நிதியமைச்சகம் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details