தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: மெல்லிய சரிவுடன் வர்த்தக நாள் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று சிறப்பான உயர்வைச் சந்தித்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் பெரிய ஏற்ற இறக்கங்களை சந்திக்காமல் நிறைவடைந்தன.

சந்தை நிலவரம்
சந்தை நிலவரம்

By

Published : Sep 29, 2020, 9:19 PM IST

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 8.41 புள்ளிகள் சரிந்து 37,973.22 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.15 புள்ளிகள் சரிந்து 11,222.40 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

அதிகபட்சமாக ஹின்டால்கோ நிறுவன பங்குகள் சுமார் 5 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், டைட்டான், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

அதேவேளை, யு.பி.எல், ஓ.என்.ஜி.சி., இன்டஸ்இன்ட், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48,160-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.60,700-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.15க்கும், டீசல் ரூ.76.12க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ரூ. 5,550 கோடியை முதலீடு செய்யும் கேகேஆர்!

ABOUT THE AUTHOR

...view details