மும்பை: பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையால் வர்த்தகம் இன்று (ஆகஸ்ட் 7) மந்தமான உயர்வைக் கண்டு நிறைவடைந்தது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இந்த் வங்கி, யூபிஎல், ஏசியன் பெய்ண்ட்ஸ், பஜாஜ் ஃபின்செர்வ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், மஹந்திரா & மஹந்திரா, சன் ஃபார்மா, டைடன் நிறுவனம் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
தேவையில்லாத சத்தங்கள் கேட்காது: ஜீப்ரானிக்ஸ் ஜீப் மாங்க் வயர்லெஸ் இயர்ஃபோன்!
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 15.12 புள்ளிகள் உயர்ந்து 38,040.57 புள்ளிகளில் வர்த்தகமானது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்து 11,214.05 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
நேற்று (ஆகஸ்ட் 6) ரூ.74.93 காசுகளாக நிலைப்பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றங்கள் எதுவுமின்றி ரூ.74.93 காசுகளாக இருந்தது.
யெஸ் வங்கியின் 4.98 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்திய எல்.ஐ.சி!
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெயின் விலை தற்போதைய நிலவரப்படி 15 புள்ளிகள் சரிந்து 3137 ரூபாயாக வர்த்தகமானது
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 45 புள்ளிகள் உயர்ந்து 55,890 ரூபாயாக வர்த்தகமானது
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 773 புள்ளிகள் உயர்ந்து 76,825 ரூபாயாக வர்த்தகமானது
ஆகஸ்ட் 7 பங்குச் சந்தை நிலவரம்