மும்பை: தொடர்ந்து ஆறாவது நாளாக பங்குச் சந்தை முகமைகளான சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்தைக் கண்டுள்ளது.
பங்குகளின் ஏற்ற இறக்கங்கள்
இண்டஸ்இந்த் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யூபிஎல், ஐசிஐசிஐ வங்கி, சன் ஃபார்மா ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற நிறுவன பங்குகளின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,
- மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 353.84 புள்ளிகள் உயர்ந்து 39,467.31 புள்ளிகளாக இருந்தது.
- தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 88.35 புள்ளிகள் உயர்ந்து 11,647.60 புள்ளிகளில் நிறைவுற்றது.
ரூபாய்
73 ரூபாய் 82 காசுகளாக நிலை பெற்றிருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 39 காசுகளாக இருந்தது.
பொருள் வணிகச் சந்தை
- கச்சா எண்ணெய்யின் விலை தற்போதைய நிலவரப்படி 14 புள்ளிகள் சரிந்து 3,158 ரூபாயாக வர்த்தகமானது.
- தங்கத்தின் விலை தற்போதைய நிலவரப்படி 481 புள்ளிகள் உயர்ந்து 51,383 ரூபாயாக வர்த்தகமானது.
- வெள்ளியின் விலை தற்போதைய நிலவரப்படி 841 புள்ளிகள் உயர்ந்து 66,031 ரூபாயாக வர்த்தகமானது.