மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (டிச.02) வர்த்தகமானதைவிட சுமார் 120 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும், அதன்பின் தொடர்ந்து சரிந்து இந்தியப் பங்குசந்தை தள்ளாட்டத்துடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 14.61 புள்ளிகள் (0.03 விழுக்காடு) அதிகரித்து 44,632.65 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 20.15 புள்ளிகள் (0.15 விழுக்காடு) உயர்ந்து 13,133.90 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் பங்குகள் 7.33 விழுக்காடு உயர்ந்தது. மேலும், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி. ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் எஸ்பிஐ லைப், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டிசிஎஸ், இன்போஸிஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.