மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 140 புள்ளிகள் ஏற்றம் கண்டு இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் (0.31 விழுக்காடு) உயர்ந்து 40,685.50 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 33.90 புள்ளிகள் (0.28 விழுக்காடு) ஏற்றம் கண்டு 11,930.35 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக மாருதி நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு வரை உயர்ந்தது. அதேபோல எம் & எம், டாடா ஸ்டீல், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் அல்ட்ராசெம்கோ , ஹெச்சிஎல் டெக், யுனிலிவர், கெயில், உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைக் கண்டன.