மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 110 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும் விரைவிலேயே சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, இன்று நாள் முழுவதும் இறக்கத்திலேயே வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக நாள் இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.18 புள்ளிகள் (0.34 விழுக்காடு) சரிந்து 37,606.89 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28.70 புள்ளிகள் (0.26 விழுக்காடு) சரிந்து 11,073.45 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக இரண்டு விழுக்காடு வரை சரிவடைந்தது. அதேபோல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், கோட்டக் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
மறுபுறம் சன் பார்மா, எம் அண்ட் எம், ஹெச்.சி.எல் டெக் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.