மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் சுமார் 55 புள்ளிகள் உயர்ந்து தனது வர்த்தகத்தை தொடங்கியது.
ஏற்றம்- இறக்கம் என மாறி மாறி வர்த்தகமான மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 187.24 புள்ளிகள் (0.51 விழுக்காடு) உயர்ந்து 36,674.52 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36 புள்ளிகள் (0.33 விழுக்காடு) உயர்ந்து 10799.65 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் எட்டு விழுக்காடு வரை உயர்ந்தது. அதேபோல் இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பின்சர்வ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
மறுபுறம், என்டிபிசி, ஐடிசி, பவர் கிரிட் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தின்போது சுமார் 348.35 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.