மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட சுமார் 214 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும், இன்றைய நாளின் பிற்பகுதியில், இந்திய பங்குச் சந்தை சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.72 புள்ளிகள் (0.13 விழுக்காடு) சரிந்து 35,915.80 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.30 புள்ளிகள் (0.10 விழுக்காடு) சரிந்து 10,302.10 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு வரை சரிவடைந்தது. அதேபோல் சன் பார்மா, ஐடிசி, ஓஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
மறுபுறம், மாருதி, நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
சர்வதேச பங்குச் சந்தை