இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவது, ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் குறைக்கப்படுகிறது. அதன்படி வட்டி விகிதம் 4.4 விழுக்காட்டில் இருந்து 4 விழுக்காடாக குறைகிறது. மேலும் வங்கிக்கடன் தவணைகளைச் செலுத்த மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க, வங்கிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என பல வங்கிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் ரஜ்னிஷ் குமார், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும்; இதனால் பல பேர் பலனடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு மக்களுக்கு பயன்பெறும் என்றும், இதன்முலம் வங்கிகள் விரைவில் மேம்படும் என்றும் பிஜிஎம் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட், அசோசம், நரேட்கோ, டாடா ரியால்டி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நிறுவன தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட உதவும் சீன செயற்கைக்கோள்