தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஐஆர்சிடிசி பங்குகள் உயர்வு - காரணம் இதுதானா?

மும்பை: இந்திய ரயில்வே மே 12ஆம் தேதி முதல் தனது சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் உயர்வைச் சந்தித்துள்ளது.

IRCTC share
IRCTC share

By

Published : May 11, 2020, 1:45 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் இந்தியன் ரயில்வே தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில வாரங்களாகவே சரிவைச் சந்தித்தது. இந்நிலையில் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில் சேவை மே 12ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் பின் படிப்படியாக ரயில்வே சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

ரயில்வே துறையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை முதல் உயர்ந்துவருகிறது. மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்குகள் ஐந்து விழுக்காடு உயர்ந்து 1302.85 ரூபாய்க்கு வர்த்தகமாகிவருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 1303.55 ரூபாய்க்கு வர்த்தகமாகிவருகிறது.

ரயில் சேவை தொடங்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டால் வரும் காலங்களில் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 10 லட்சம் கோடியைக் கடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு

ABOUT THE AUTHOR

...view details